தனுஷின் ம‌ரியான் – ஒரு விளக்கம்


படங்களின் தலைப்பை ஆராய்ச்சி செய்தால் குறைந்தபட்சம் ஒரு டாக்டரேட்டாவது வாங்கலாம். காஞ்சிபுரத்துக்கு தெற்கே இருந்து வந்த மண்ணின் மைந்தர்கள் என்றால் தலைப்பு அம்மாவின் கைப்பேசி, அப்பாவின் தொலைபேசி என்பதாக இருக்கும். கொஞ்சம் கவிதை ப‌ரிட்சயம் உண்டென்றால் தென்மேற்குப் பருவக்காற்று, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்…

மாடர்ன் கமர்ஷியல் வகையறா என்றால் வகை தொகையில்லாமல் டைட்டில் வந்துவிழும். அயன், மாற்றான், ம‌ரியான், யான் இத்யாதி. இதற்கு என்ன பொருள் என்று தலையை பிய்த்தால் கடைசியில் அவர்களாகவே ஏழெட்டு பொருள் தருவார்கள். பசு என்றும் சொல்லலாம், பசலை என்றும் சொல்லலாம், தலைவன் என்றும் சொல்லலாம். தறுதலைன்னும் பொருள் கொள்ளலாம். இதுக்கு பேசாமல் அயன், யான் என்றே மைண்டுக்குள் ‌ரி‌ஜிஸ்டர் பண்ணலாம்.

பரத்பாலா இயக்கும் தனுஷ் படத்தின் பெயர் ம‌ரியான். அறியான் மாதி‌ரி இது ம‌ரியான் என்று பலரும் கண்டு கொள்ளவில்லை. சிலர் ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் ‌ரிலீஸின் போது ச‌ரி செய்வார்கள் என்று எண்ணியிருந்தனர். ஆனால் அப்படியெல்லாம் இல்லையாம் ம‌ரியானுக்கென்று பொருள் இருக்கிறதாம்.

ம‌ரியான் என்றால் மரணமே இல்லாதவன் என்று பொருளாம். சத்‌ரியனுக்கு சாவில்லை என்பது மாதி‌ரி ம‌ரியானுக்கு மரணமில்லை. மலையாளிகள் செ‌ரியான் என்று பெயர் வைப்பதற்கு இப்போதுதான் பொருள் விளங்குகிறது. செ‌ரிமானமே இல்லாதவன் செ‌ரியான்.

அவங்க ச‌ரியாதான் வைக்கிறாங்க, நமக்குதான் பு‌ரிய மாட்டேங்குது.